Friday, March 20, 2015

நீல வானத்தின் நித்திய பிரசவத்தில் 
நிதமும் தோன்றி நிதமும் மறைந்து
வாழும் வகையை நமக்கு புகட்டும்
பொன்வண்ணத்து சூரியக்குழந்தை



வைகறை வணக்கத்துடன்
லதா கணேசன் 

Saturday, December 20, 2014

gnanathai thedi





ஞானத்தை தேடி


உனது ஆதியும் அறியேன் அந்தமும் அறியேன்
நீயின்றி துயரமில்லை நீயின்றி மகிழ்ச்சியில்லை
நீயின்றி சுற்றம் இல்லை நீயின்றி தனிமையில்லை
நீயின்றி நட்பில்லை நீயின்றி பகையில்லை
நீயின்றி ஆசை இல்லை நீயின்றி துறவில்லை
நீயின்றி மதமும் இல்லை நீயின்றி குணமும் இல்லை
நீயின்றி யாரும் இல்லை நீயின்றி யானும் இல்லை
நீயின்றி எனது இல்லை நீயின்றி பிறிது இல்லை
நீயின்றி இவ்வுலகில்லை நீஇன்றேல் எதுவும் இல்லை
ஏ... மனமே, உன்னால் அனைத்தும் எழுவதால்
நீ  இல்லாமையே சிவத்தை அறிதல் காண் !!!!!!

லதா கணேசன்



Thursday, December 18, 2014

PESHWARIN PINJUGAL


பெஷ்வாரின் பிஞ்சுகள் 



ஏன் இந்த சீற்றம் நண்பா
எதற்காக இந்த பதற்றம்


சின்னம் சிறு மொட்டுகளை கிள்ளி எறிய
உனது இரத்தம் தோய்ந்த கரங்கள் நாணவில்லையா ?

குரோதமும் பகையுணர்ச்சியும் உன்னை மதியிழக்க வைத்தனவா ?
யாரிடம் கோபம் , எவரிடம் வஞ்ச உணர்ச்சி ?

மதங்கொண்ட யானைக் கூட்டம்
சிறு மான் கன்றுகளை மிதித்து எறிவதா?

 வஞ்சினம் தீர்க்க வந்த புலிகள்
வழியில் அகபட்ட புறாக்களை கொல்வதா ?

என்  பிள்ளைகள் வாழ வழி இல்லை எனில்
உலகில் வேறு பிள்ளைகள் வாழ வேண்டாம்
என்று தீர்ப்பு எழுத யார் கொடுத்தார் அதிகாரம் உனக்கு ?

உனது குறைகளை கேட்க இந்த உலகம் தயாரக
நிற்க நீ முறை தவறி நடப்பது நியாயமா?

உன் இனம் வாழ உன் இனத்து கன்றுகளை
வேரருக்கிராயே ஏன் இந்த முரண்பாடு ?

மதத்தை மீறியது மனமல்லவா
அந்த மனம்தன்னில் நிறைய வேண்டியது அன்பல்லவா ?

 அமுதூட்டுகையில் உன் அன்னை அன்பூட்ட மறந்தனளா ?
அன்பு வழி நடக்க அறிவுரை பகர உனது தந்தை இல்லையா ?


அன்பு வழி வளர்ந்திருந்தால் நீ அதிகாரம் விரும்ப மாட்டாய்
அன்பு நீ அறிந்திருந்தால் அப்பிஞ்சுகளை அழித்திருக்க மாட்டாய்


ஆதியில் தோன்றி உன் வாழ்க்கை உனக்கு என்ன கொடுத்ததோ
அதையே நீ பெற்ற கசப்பினையே மற்றவருக்கும் பகிர்கிறாய்

வேண்டாம் நண்பா வா  உன்னை நான் மதம் மாற்றுகிறேன்
நானும் மாறுகிறேன் அன்பெனும் மதத்திற்கு .....


லதா கணேசன்